அரசின் சேவைகளை பெற ஆதார் அத்தியாவசியமானது ஆகும். எனவே, குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில், அவர்களின் ஆதார் விவரங்களை இப்போதே புதுப்பிப்பது முக்கியம் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக, 5 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு செய்யப்படும் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு சேவை, 2026 செப்டம்பர் 30 வரை இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆதார் விவரங்களை புதுப்பித்து கொள்ளுமாறு அரசு அறிவித்துள்ளது.