மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு நேற்று (நவ., 11) தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இன்று (நவ., 12) ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ராமதாஸ், அன்புமணி மோதல்போக்கு காரணமாக கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.