மாம்பழம் சின்னத்தை முடக்கம் செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தனது தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரியும், பாமக பிரச்சனை தீரும் வரை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தொடர்ந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் விசாரணைக்கு உகந்தது அல்ல என்று நீதிபதி தெரிவித்துள்ளார். தந்தை சொல்லை மகன் கேட்பதில்லையா என தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.