'ஹீட்' மற்றும் 'மேன்ஹன்டர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் நூனன் (74) அண்மையில் காலமானார். நடிகராக மட்டுமின்றி, சிறந்த நாடக ஆசிரியர் மற்றும் இயக்குநராகவும் முத்திரை பதித்த இவரது மறைவை இயக்குநர் ஃப்ரெட் டெக்கர் உறுதிப்படுத்தியுள்ளார். 1980-களில் தனது திரையுலக பயணத்தை தொடங்கி பல மறக்க முடியாத கதாபாத்திரங்களில் நடித்த இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.