பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான 'பாகுபலி' திரைப்படம் இரண்டு பாகங்களும் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரபல இயக்குனர் மணிரத்னம், 'பாகுபலி' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படாமல் இருந்திருந்தால், 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்திருக்க மாட்டேன் என்று கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ராஜமவுலியை சந்தித்தபோது அவரிடமே இதை கூறியதாகவும் மணிரத்னம் தெரிவித்துள்ளார். இது பழைய வீடியோ என்றாலும், தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.