“ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் உறுதுணையாக இருந்துள்ளார். காங்கிரஸாருக்கு அந்த நன்றியுணர்வு இருக்க வேண்டும். மாணிக்கம் தாகூர் ஒரு பொருட்டே இல்லை என காங்கிரஸாரே கூறிவிட்டனர். செய்தியில் வர வேண்டும் என்பதற்காக மாணிக்கம் தாகூர் எதையாவது பேசிக்கொண்டிருப்பார்” என்றார்.