ராகுல் காந்தியைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி

5135பார்த்தது
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் திடீரென டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு மாநில காங்கிரஸ் தரப்பில் தகவல் அனுப்பப்பட்டதா அல்லது காங்கிரஸ் தலைமை அழைத்ததா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

நன்றி: News18

தொடர்புடைய செய்தி