தமிழக சட்டப்பேரவையில் 'மனமார்ந்த நன்றி' என்பதற்குப் பதிலாக 'மன்மத நன்றி' என கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள்பிரகாஷ் தவறுதலாகக் கூறியது வைரலாகி வருகிறது. ஏற்கனவே கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி இதேபோன்று கூறியிருந்த நிலையில், மீண்டும் அருள்பிரகாஷ் அவ்வாறு பேசியதும் கனிமொழி உள்ளிட்ட சக எம்.எல்.ஏ-க்கள் சிரித்தனர். தவெக எம்.எல்.ஏ-க்களின் தொடர் தடுமாற்றம் மக்களிடையே விவாதமாகியுள்ளது.