ஊதிய உயர்வு கோரி மருத்துவர் பாதயாத்திரை: கோர்ட்டில் மனு

3407பார்த்தது
ஊதிய உயர்வு கோரி மருத்துவர் பாதயாத்திரை: கோர்ட்டில் மனு
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரிலிருந்து சென்னை வரை பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர் சங்கத் தலைவர் பெருமாள் பிள்ளை, தன்னை நாகப்பட்டினத்திற்கு பணியிடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பாதயாத்திரை தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த பணியிடமாற்றம் தன்னிச்சையானது என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி