தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் நீண்ட நேரம் நிதிநிலை அறிக்கை வாசித்த அமைச்சர்களில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய இடம் பிடித்துள்ளார். 2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையை அவர் சுமார் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் வாசித்தார். த.வெ.க அரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று (ஆக.5) தாக்கல் செய்த நிலையில், பட்ஜெட் உரையை நிதியமைச்சர் மரிய வில்சன் 2 மணிநேரம் 30 நிமிடங்கள் வாசித்தார்.