சென்னை மெரினா நீலக்கொடி கடற்கரை மற்றும் நீச்சல் குளத்தை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், கடற்கரை வளாகம், கழிப்பறைகள் மற்றும் நீச்சல் குளத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், அண்ணா சதுக்கம் அருகில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.