கர்நாடகாவில் நடந்த திருமண மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மங்களூருவை சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண் பேஸ்புக் மூலம் அறிமுகமான மணீஷ் என்ற இளைஞரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து ப்ரீத்தியை நம்பவைத்து ஏமாற்றி ரூ.2 லட்சத்திற்கு மேல் பணத்தை வாங்கிக்கொண்டு, வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் இதே போன்று பல பெண்களை மணீஷ் ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்துள்ளார் என ப்ரீத்திக்கு தெரியவரவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.