திருமணமான ஆண்களுக்கு, பிரம்மச்சாரிகளை விட உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு 3.2 மடங்கு அதிகம் எனப் போலந்து ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் பெண்களின் உடல் எடை அதிகரிப்புடன் திருமணத்திற்கு நேரடித் தொடர்பில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய தொப்பை மற்றும் உடல் பருமன் அதிகரிப்பு, இரத்த அழுத்தம் முதல் சிறுநீரகப் பாதிப்பு வரை பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.