வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் எரிவாயு வெடிப்பு விபத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இந்த பயங்கர விபத்து குறித்து அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளன.