ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள குஷ்கேடா தொழில்துறை பகுதியில் ஒரு தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு இன்று (பிப்.16) காலை 10 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 7 பேர் உயிருடன் எரிந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் அந்தப் பகுதி முழுவதும் துக்கத்தில் மூழ்கியுள்ளது.