கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், வாகன நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த விபத்தின்போது அங்கிருந்த சோதனை ஓட்டத்திற்கு தயாராக இருந்த ரயில் என்ஜின் ஒன்றும் தீக்கிரையானது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.