ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து: இருவர் பலி

53பார்த்தது
ஆற்காடு அருகே ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து: இருவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தேவி நகரில், ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக பால் காய்ச்சியபோது எதிர்பாராத விதமாக பேட்டரி வாகனத்தின் பேட்டரி வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஐஸ்கிரீம் கடையின் உரிமையாளர் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி