கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் இன்று (மே.30) ஏற்பட்ட பயங்கர தீவிபத்து அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், கட்டிடத்தில் இருந்த பொருட்கள் மற்றும் சொத்துக்கள் தீயில் சேதமடைந்தன. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.