பிலிப்பைன்ஸில் பயங்கர தீ விபத்து.. 1,000 வீடுகள் எரிந்து சேதம்

32பார்த்தது
பிலிப்பைன்ஸில் பயங்கர தீ விபத்து.. 1,000 வீடுகள் எரிந்து சேதம்
தெற்கு பிலிப்பைன்ஸின் தாவி மாகாணத்தில் உள்ள போங்காவோவில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. தீப்பிழம்புகள காரணமாக சுமார் 5,000 பேரை தங்கள் பாதுகாப்பு கருதி இடம்பெயர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை இறுதியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி