பொலிவியாவின் இரண்டாவது பெரிய நகரமான எல் ஆல்டோவில் விமானப்படைக்கு சொந்தமான C-130 ஹெர்குலஸ் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.