பிரபல ஹாலிவுட் அனிமேஷன் தொடரான 'மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ்' கதையின் முதன்மை நாயகனான 'ஹீ-மேன்' கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தமிழ் மற்றும் மலையாள பதிப்புகளில் குரல் கொடுத்துள்ளார். நெற்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த தொடரில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தற்போது டப்பிங் கலைஞராகவும் தனது புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.