மகா சிவராத்திரியில் நாட்டு மக்களுக்கு சிவபெருமான் ஆசி கிடைக்கட்டும் - பிரதமர் வாழ்த்து

0பார்த்தது
மகா சிவராத்திரியில் நாட்டு மக்களுக்கு சிவபெருமான் ஆசி கிடைக்கட்டும் - பிரதமர் வாழ்த்து
உலகம் முழுவதும் மகா சிவராத்திரி இன்று (பிப்.15) கோலாகலமாக வழிபடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த புனிதமான நாளில் சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டு மக்களின் வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பெருக ஈசன் ஆசீர்வதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி