மேற்குவங்க மாநிலத்தில் அரசு உணவகங்களில் மீன் குழம்புடன் சாப்பாடு வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். அரசு சார்பில் ரூ.5-க்கு மீன் குழம்புடன் கூடிய சாப்பாடு வழங்க உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் சுமார் 400 பிரத்யேக உணவகங்களில் வாரம் இருமுறை இந்த உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 'அம்மா உணவகம்' திட்டம் போல, மேற்குவங்கத்தில் முதல்முறையாக ஆட்சிக்கு வந்துள்ள
பாஜக அரசு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.