மழைக்காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மாநிலம் முழுவதும் கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமிக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். கனமழை, புயல் காலங்களில் மின்தடை, மின் கம்பம் சேதம் போன்ற பணிகளை களப்பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் காலி பணியிடங்களை கருத்தில் கொண்டு, மழைக்கால பணிச்சுமையை சமாளிக்க தற்காலிக பணியாளர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.