திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாநில துணைச் செயலாளரான மீனா ஜெயக்குமார் திமுகவில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'இன்று முதல்
திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். இதுவரை பயணித்த இந்த
அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து என்னை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, வழிநடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.