மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்று வரும் நிலையில், கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதாக கூறி பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விழாவிற்கு வருகை தந்த பக்தர்களிடம் அமைதியாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.