மீஞ்சூரில் உள்ள 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் 28-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில் உற்சவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு மாடவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.