தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து பயணித்து வந்த நடிகர் மீசை ராஜேந்திரன் தற்போது தவெகவில் இணைந்துள்ளார். தேர்தலுக்கு முன் தேமுதிகவில் சீட் வழங்காத நிலையில், அதிமுகவில் இணைந்து தேர்தல் பணியாற்றினார். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் எம்எல்ஏவான இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், என்.ஆனந்த் முன்னிலையில் இன்று இணைந்தார். அவருடன் நடிகர் மீசை ராஜேந்திரன், அதிமுக செய்தி தொடர்பாளர் அதி வீரபாண்டியன் ஆகியோரும் தவெகவில் இணைந்தனர்.