தேமுதிக வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. இந்நிலையில், தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான நடிகர் மீசை ராஜேந்திரன், அக்கட்சியில் இருந்து விலகினார். கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த அவர், தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.