சென்னை அமைந்தகரையில் வசிக்கும் பெண் ஒருவர் மீஷோவில் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த பொருட்களை கொடுக்க சென்ற மீஷோ டெலிவரி பாய், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. பொருளை கொடுக்கச் சென்றபோது குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈட்பட்டதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் அயனாவரத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.