2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுகவை வீழ்த்தும் நோக்கில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக, என்டிஏ கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நேற்றிரவு சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணியை தமிழக பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். விரைவில் தேமுதிகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.