மேகாலயா நிலக்கரி சுரங்க விபத்து.. உயிரிழப்பு 18-ஆக உயர்வு

8072பார்த்தது
மேகாலயா மாநிலம் தஷ்காய் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று (பிப்.5) நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. சுரங்க தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில், காயமடைந்த பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேகாலயா முதலமைச்சரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி