மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்குத் தடை விதிக்க முடியாது என கடந்த 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யப் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவை நீதிபதிகள் தற்போது தள்ளுபடி செய்துள்ளனர்.