"மேகதாதுவில் அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது; அரசியல் காரணங்களுக்காகவும், இரு மாநிலங்களிடையே பிரச்னையை ஏற்படுத்தவுமே டி.கே.சிவக்குமார் இவ்வாறு பேசுகிறார்" என்று அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக எடுக்கும்” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.