கர்நாடக அரசு பெங்களூருவின் குடிநீர், மின்சார தேவைகளுக்காக மேகதாதுவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே சுமார் 9 லட்சம் மரங்களை வெட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசு சமர்ப்பித்த திட்ட வரைவு அறிக்கைகள் மத்திய நீர் ஆணையத்தால் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டன.