“கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டால், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் மொத்தக் கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரித்து விடும்” என அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த சிக்கலில் கர்நாடக
காங்கிரஸ் அரசின் சதித் திட்டங்களை விழிப்புடன் செயல்பட்டு தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்காக, மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு புதிதாக தயாரித்திருக்கும் விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள அமைச்சகம் பெற்றுக் கொள்ளக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.