மேகதாது விவகாரம்: மாநிலங்களவையில் அவசர விவாதம் கோரி திருச்சி சிவா நோட்டீஸ்

46பார்த்தது
மேகதாது விவகாரம்: மாநிலங்களவையில் அவசர விவாதம் கோரி திருச்சி சிவா நோட்டீஸ்
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு முறையாக அமல்படுத்தாததையும், மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயல்வதையும் கண்டித்து மாநிலங்களவையில் அவசர விவாதம் நடத்த கோரி திமுக எம்பி திருச்சி சிவா ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாழாக்கி நீர் நெருக்கடியை உருவாக்கும் என்று அவர் தனது நோட்டீஸில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி