மேகதாது அணை விவகாரம் தொடர்பாக வரும் 15ஆம் தேதி கர்நாடகா, தமிழ்நாடு எல்லையான அத்திப்பள்ளியில் முழு எல்லை அடைப்பு
போராட்டம் நடைபெறும் என கன்னட சலாவலி
வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்கள் கர்நாடகாவில் ஓடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளதால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. இந்த
போராட்டம் நடக்கும் போது தமிழர்களுக்கு கடந்த காலங்களில் நடந்தது போல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.