மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் 5 நாட்கள் தொடர்
போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் செப்டம்பர் 20 முதல்
போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டும், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.