செயற்கை நுண்ணறிவு மற்றும் உயர் செயல்திறன் கணினி தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மெமரி சிப்களுக்கான தேவை அதிகரித்து, அதன் எதிரொலியாக விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப் போன்ற மின்னணு சாதனங்களின் விலைகளும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில், வரும் மார்ச் மாதத்திற்குள் மெமரி சிப் விலைகள் 120% உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.