புளூம்பெர்க் பகுப்பாய்வின்படி, அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் நிகர சொத்து மதிப்பு $1 பில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு பிறகு பில்லியனர் பட்டியலில் இணையும் உலகின் 2-வது கால்பந்து வீரர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். பல்வேறு முதலீடுகள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் தவிர, 2007 முதல் அவர் சம்பளம் மற்றும் போனஸாக மட்டுமே $700 மில்லியனுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.