கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிப்பு விவகாரத்தில் பாஜகவினர் பொய் பரப்புகின்றனர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அதில், "தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் பரப்புகின்றனர். ஆனால் கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது. இது பாஜகவின் தமிழ்நாடு விரோத போக்கு" என அவர் கூறியுள்ளார்.