கோவை மெட்ரோ திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக சமர்ப்பித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 2011 மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை அனுப்பியதால் திட்டம் ஒப்புதல் பெறவில்லை; 2025 மக்கள்தொகை கணக்கை பயன்படுத்தியிருந்தால் அனுமதி கிடைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களில் தவறு மாநில அரசில்தான் உள்ளது என்றும் கூறியுள்ளார்.