நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்தத் தவறியதற்கான காரணத்தை விளக்கி ஒன்றிய உள்துறைச் செயலாளர், டெல்லி காவல் ஆணையர் மற்றும் மெட்ரோ தலைவர் ஆகியோர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைதியாகக் கூடுபவர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்யக் கூடாது எனவும், மெட்ரோ, ரயில், இணையச் சேவைகளுக்குத் தடையின்றி பொதுமக்கள் நடமாட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.