பெங்களூருவின்
காளேன அக்ரஹாரா முதல் நாகவரா வரையிலான 21.3 கிலோமீட்டர் நீள இளஞ்சிவப்பு வழித்தடத்தில் வரும் ஆக.12-ம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்குகிறது. ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் தலைமையில் ஆக.14-ம் தேதி வரை நடைபெறும் இந்த சோதனையில், உயர்மட்ட மற்றும் சுரங்க பாதைகளின் பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன. மேலும், வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த வழித்தடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில்கள் இயங்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.