மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று 2-வது நாளாக ரத்து

41பார்த்தது
மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் இன்று 2-வது நாளாக ரத்து
கோவை மேட்டுப்பாளையம்–ஊட்டி மலைரெயில் பாதையில் கனமழையால் மண்சரிவு, மரங்கள் சாய்வு, பாறைகள் உருண்டு விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. தண்டவாளம் சேறும் சகதியுமாக மாறியதால் நேற்று (ஜன.02) ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து குன்னூர் இருப்பு பாதை பொறியாளர் மேற்பார்வையில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் நீடிப்பதால் இன்று 2-வது நாளாகவும் ஊட்டி–மேட்டுப்பாளையம் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி