ரெயில்களில் நடுப்படுக்கையை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உறங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரெயில்வே விதிமுறைகளை நினைவூட்டியுள்ளது. மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் அதை இருக்கையாக மாற்ற வேண்டும் என்றாலும், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படும். பயணிகளிடையே ஏற்படும் மோதல்களை தவிர்க்கவும், சுமூகமான பயணத்தை உறுதி செய்யவும் இந்த விழிப்புணர்வு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.