காங்கோவில் ராணுவ விமான விபத்து: 2 ஜெனரல்கள் உள்பட 14 பேர் பலி

2பார்த்தது
காங்கோ ஜனநாயகக் குடியரசில் கிக்விட் பகுதியிலிருந்து தலைநகர் கின்ஷாசாவிற்குச் சென்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கே அருகே விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ நீதிமன்றத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முடோம்போ கட்டலாய், தணிக்கை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பாகுமி லிகுலியா ஆகிய 2 மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் குழுவினர் உள்பட பயணித்த 14 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி