பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் - 4 பேர் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எஸ்கே பைன் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த லாரி சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இக்கோர விபத்தில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 3 வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
