பல தலைமுறைகளாக தமிழ்நாட்டில் குழந்தைகளுடன் இணைந்து வளர்ந்து வரும் பிரிட்டானியா மில்க் பிக்கிஸ், மாநிலத்தின் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் 'திருக்குறள் சேலஞ்ச்' என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் திருக்குறளை இன்டராக்டிவ் முறையில் கற்கவும், அதன் ஞானத்தை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும் ஊக்குவிக்கின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (ஜூன் 03) நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து விவாதித்தனர்.